பாணாவரம், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் திருடியதாக பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம் மேற்பார்வையில் ஆய்வாளர்கள் மாகலிங்கம் (பாணாவரம்), சக்திலிங்கம் (காவேரிபாக்கம்) ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீஸார் பாணாவரம் ரயில்வே மேம்பாலம் அருகே செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து பாணாவரம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பாணாவரம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (27), குப்புகல்மேடு பகுதியைச் சேர்ந்த நந்தனி (எ) கௌரி (29), திருவண்ணாமலையைச் சேர்ந்த சினிவாசன் (25), வேலூர் கொசப்பேட்டையைச் சேர்ந்த சின்னா (எ) சந்திரன் (30), சலவன்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (29) என்பதும், இவர்கள் பாணாவரம், காவேரிபாக்கம் ஆகிய பகுதிகளில் கார், பைக் ஆகியவற்றி திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 1 கார், 2 பைக் மற்றும் ரூ. 50 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.