திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

குப்பை வண்டியில் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் குப்பை வண்டியில் முதியவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி மாநில மனித உரிமை

Updated On :6 ஏப்ரல் 2018, 3:23 am IST

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் குப்பை வண்டியில் முதியவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் தபால் நிலையத் தெருவில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த மார்ச் மாதம் 27 -ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பெயர் ராஜாராம் என்பதும், குடும்பத்தைப் பிரிந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 
பின்னர், அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு, சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான குப்பை வண்டியில் முதியவரின் சடலம் கடந்த 2-ஆம் தேதி எடுத்துச் செல்லப்பட்டது. 3 சக்கர சைக்கிள் போன்ற அந்த வண்டியில் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டுள்ள சடலத்தின் ஒரு பகுதி வெளியே தெரிந்ததால், அச்செய்தி படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது.
தாமாக முன் வந்து விசாரணை: சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை விசாரித்த ஆணையத்தின் தலைவி மீனாகுமாரி, இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் இயக்குநர் ஆகியோருக்கு 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.