கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கைலாசகிரியில் தென்படும் மலைப்பாம்பு: வனத்துறை எச்சரிக்கை

ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் மலைப்பாம்பு தென்பட்டதால் அப்பகுதிக்குச் சென்று வருவோர் பாதுகாப்புடன்

Updated On :6 ஏப்ரல் 2018, 4:15 am IST

ஆம்பூர் அருகே கைலாசகிரி மலையில் மலைப்பாம்பு தென்பட்டதால் அப்பகுதிக்குச் சென்று வருவோர் பாதுகாப்புடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் அருகே உள்ளது கைலாசகிரி மலை. இந்த மலையின் மீது பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. 
பக்தர்கள் மலைமேல் நடந்து செல்வதற்காக சுமார் 1,200 படிக்கெட்டுகள் உள்ள பாதை வழியும், வாகனங்களில் மலைமேல் செல்ல சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. 
வாகனங்களில் செல்வதற்கான மலைப்பாதை அமைக்கும் பணி நிறைவடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
 ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, கார்த்திகை தீபம், தைப்பூசம் போன்ற விசேஷ நாள்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைமேல் உள்ள புண்ணிய தீர்த்தக் குளத்தில் நீராடி, கோயிலில் வழிபட்டு வருகின்றனர்.  
இது தவிர பிரதி மாத கிருத்திகை தினங்களிலும், பண்டிகை நாள்களிலும் மலை மேல் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் சென்று 
வழிபட்டு வருகின்றனர். 
மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், கால்நடை மேய்ப்போர் என எப்போதும் கைலாசகிரி மலையில் 
மக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது.  
இந்நிலையில் கடந்த 10 நாள்களாக மலைப்பாதை பகுதியிலும், படிக்கெட்டு பகுதியிலும் பெரிய மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதாக வனத் துறையினருக்கு பொதுமக்கள்  தகவல் தெரிவித்தனர்.
 வனவர் கருணாமூர்த்தி, வனக்காப்பாளர் காந்தராஜ் மலைப்பாம்பு ஊர்ந்து சென்ற பகுதியை செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர். 
இப்பகுதியில் உள்ள மலைப்பாம்பு பெரியதாக இருக்கும் எனத் தெரியவருகிறது. எனவே காலை, மாலை வேளைகளில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், கால்நடை மேய்ப்போர் பாதுகாப்பாக சென்று வர வேண்டுமென எச்சரித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.