முதல்வர் விஜய் ஜோசப் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடன் கேக் வெட்டிக் கொண்டாடிய புகைப்படங்களை நடிகை த்ரிஷா பகிர்ந்து அது வைரலான நிலையில், இன்று அவர் வெளியிட்டிருக்கும் விடியோ பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் பிறந்த நாளுக்கு அவரின் ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். பிறந்தநாள் அன்றே, த்ரிஷா வாழ்த்துப் போடுவார் என பலரும் காத்திருந்தார்கள்.
கடந்த 3 ஆண்டுகளாக விஜய்க்கு முதல் ஆளாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த த்ரிஷா இம்முறை எந்த வாழ்த்து பதிவும் வெளியிடவில்லை. அவர் எப்போது வாழ்த்து தெரிவிப்பார், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
யாரும் எதிர்பாராத நிலையில், நேற்றிரவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்வர் விஜய், கேக் வெட்டி பிறந்த நாளைக் கொண்டாடும் புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டிருந்தார்.
முதல்வர் விஜய்க்கு விதவிதமாக 5 வகையான கேக்குகளை பரிசளித்திருந்தார் த்ரிஷா. இந்தப் புகைப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் லைக் (LIKE) செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்(story) ஒரு புகைப்படம், ஒரு விடியோவை இணைத்துள்ளார். இரண்டுமே ஒரே ஜன்னலிலிருந்து எடுக்கப்பட்ட அழகிய படங்கள், விடியோக்கள்.
புகைப்படம் மேகங்கள் வானில் திரண்டு வருகிறது. ரம்மியமான பொழுதாக இருக்கும் அதே நேரத்தில், இன்னும் கொஞ்ச நேரத்தில் அனைத்து மேகங்களும் வானில் ஒன்று சேர்ந்து மழைஜாலத்தைக் காட்டப் போகிறது என்று தெரிகிறது. இந்த புகைப்படத்துடன் முன்பே வா, என் அன்பே வா என்ற திரைப்படப் பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது.

த்ரிஷா ஸ்டோரியின் விடியோவிலிருந்து... - படம்: இன்ஸ்டாகிராம்
அடுத்த விடியோவில் அதே இடம்தான், ஆனால், காலநிலை மாறியிருக்கிறது. மேகங்கள் ஒன்று சேர்ந்து மழையைப் பொழிகின்றன. இப்போது பாடல் ஓசைக்கு பதிலாக, இயற்கையே கொடுக்கும் அந்த மழையின் ஓசை விடியோவுடன் சேர்ந்து பார்க்கும் நாமும் மழையை கண் முன் பார்த்து ரசிப்பது போல உணர வைக்கிறது அந்த சப்தம்.
முன்பே வா.. அன்பே வா என்ற பாடலைக் கேட்கும் ரசிகர்கள், அவர் யாரைச் சொல்கிறார் என்று கேட்டு வருகிறார்கள்.
ஓரிடத்தில், அந்த நீச்சல் குளத்தில் மழை நீர் விழுந்து அதனால் ஏற்படும் அதிர்வுகளையும் ஸும் போட்டு அந்த விடியோ பதிவு செய்திருக்கிறது.
இதனைப் பார்க்கும்போது ஒரு நட்சத்திர விடுதி அல்லது விருந்தினர் விடுதி போலத் தோன்றுகிறது. இது எங்கே எடுக்கப்பட்டது என்பது பற்றிய எந்தத் தகவலும் தெரிய வரவில்லை.
நேற்று புகைப்படம் வெளியான நிலையில், இன்று த்ரிஷா விடியோவுடன் புகைப்படம் வெளியிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
Summary
A new video posted by actress Trisha on her Instagram page is going viral on social media.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

00:00! மிக அதிக கருத்துகளைப் பெற்ற பிறந்த நாள் பதிவு!

முதல்வர் விஜய்யுடன் பிறந்த நாள் கேக் வெட்டிய த்ரிஷா!

முதல்வர் விஜய் பிறந்த நாள்... த்ரிஷா ஏன் வாழ்த்தவில்லை?

கண்டிப்பா தளபதிகிட்ட சொல்றேன்... ரசிகருக்கு பதிலளித்த த்ரிஷா!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!




