
விட்டமின் டி... எங்கே இருக்கிறார் த்ரிஷா?
த்ரிஷாவின் இன்ஸ்டா விடியோ கவனம் பெற்று வருகிறது....

த்ரிஷா
நடிகை த்ரிஷா நடைபயிற்சியில் எடுத்த விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி, ஐடெண்டிட்டி ஆகிய திரைப்படங்கள் வெளியாகின. தொடர்ந்து, இந்தாண்டு நடிகர் சூர்யாவுடன் நடித்த கருப்பு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும், கர்ஜணை மற்றும் சதுரங்க வேட்டை - 2 ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இந்தாண்டு இறுதியில் இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லாலுடன் நடித்த ராம் திரைப்படமும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, த்ரிஷா நடித்த தெலுங்கு படமான விஸ்வம்பரா படமும் வெளியாகக் காத்திருக்கிறது.
தற்போது, புதிய திரைப்படமொன்றில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வருகிறது. சில நாள்களுக்கு முன் அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்ட கார் பந்தயத்தை முதல்வர் விஜய்யுடன் கண்டுகளித்தார்.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா நடைபயிற்சி செல்லும் போது சூரியக் கதிரை வாங்கியபடி இருக்கும் விடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ‘விட்டமின் டி’ எனக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் அவர் லண்டனில் இருப்பதாகவே தெரிகிறது. இந்த விடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
Actress Trisha has released a video taken while walking.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







