தவெகவில் இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை!தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

நல்ல காலத்தில்... பிறந்த நாளைக் கொண்டாடிய வாமிகா கபி!

வாமிகா கபி தன் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்...

வாமிகா கபி

Published On :

நடிகை வாமிகா கபி தன் பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சில ஆண்டுகளுக்கு முன் மார்டன் லவ் சென்னை தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவையிலும் நடித்திருந்தார்.

அண்மையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த டிசி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமானது. வணிக ரீதியாக ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தாண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வசூல் வெற்றியைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் நடிகை வாமிகா கபிக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது. டிசியில் சந்திரா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக வாமிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், இந்த வரவேற்பால் நடிகை வாமிகா கபியும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில், வாமிகா நேற்று (செப். 29) தன் பிறந்த நாளை நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பகிர்ந்து, “புதிய தொடக்கத்திற்கு நல்ல காலம் பிறந்ததாக உணர்கிறேன். என்னையும் என்னைச் சுற்றியிருப்பவர்களையும் நான் சந்திக்க இருப்பவர்களையும் இன்னும் சிறப்பாக புரிந்துகொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார். வாமிகாவின் தமிழ் ரசிகர்களும் அவருக்குத் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

Actress Wamiqa Gabbi has shared photos of her birthday celebration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.