தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்த வாமிகா கபி!

நடிகை வாமிகா கபியைக் கொண்டாடும் தமிழ் ரசிகர்கள்...

actor wamiqa gabbi

நடிகை வாமிகா கபி

Published On :

தமிழ்நாட்டில் நடிகை வாமிகா கபிக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர்.

பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை வாமிகா கபி. தமிழில் மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சில ஆண்டுகளுக்கு முன் மார்டன் லவ் சென்னை தொடரில் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவையிலும் நடித்திருந்தார்.

தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இவர் நடித்த டிசி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிப்படமாகியுள்ளது. வணிக ரீதியாக ரூ. 100 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

Story image

வசூல் வெற்றியைத் தாண்டி விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளைப் பெற்றதுடன் நடிகை வாமிகா கபிக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்துள்ளது. டிசியில் சந்திரா என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக வாமிகாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும், இந்த வரவேற்பால் நடிகை வாமிகா கபியும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதனால், டிசி படப்பிடிப்புப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, ”முதல் முறை சந்திரா என் வாழ்க்கையை மாற்றிய போது, என்னைத் தவிர வேறு யாருக்கும் அது தெரியாது.
இரண்டாவது முறை, உலகமே அவளை அறிந்தது.

திரைப்படத்தில் தாஸ் சந்திராவை மீட்டு அவளின் சுதந்திரத்தைக் கொடுத்து உண்மையில் அவள் யார் என்பதை கண்டுபிடிக்க வைத்தார். எங்கோ இந்தப் பயணத்தில், சந்திராவாவும் எனக்கு அதையேதான் செய்தாள். நான் இதுவரை சந்திக்காத என்னை மீட்டதுடன் நான் எதுவாக முடியும் என்பதையும் காட்டினாள்” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Wamiqa Gabbi has gained more fans in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.