காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நினைவுகளுக்கு ஒளி கொடுப்பதே கொண்டாட்டங்களின் அர்த்தம்: ஷ்ருதி ராமச்சந்திரன்

நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன் ஓணம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்...

 Shruti Ramachandran

நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன்

Published On :

நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன் தன் சிறுவயது ஓணம் நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

மலையாள நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இறுதியாக, நடிகர் மம்மூட்டியுடன் களம்காவலில் நடித்திருந்தார். இதற்கிடையே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று கவனம் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில், ஓணம் பண்டிகை தொடங்க உள்ளதால் புகைப்படங்களைப் பகிர்ந்த ஷ்ருதி ராமச்சந்திரன், ”என் சிறுவயதில் நான் கொண்டாடிய அனைத்து ஓணங்களும் நினைவில் இல்லை. ஆனால், காவும் நானும் குழந்தைகளாக இருந்த ஒரு ஆண்டு மட்டும் நன்றாக நினைவிருக்கிறது. அந்த ஆண்டு, அப்பாவும் அம்மாவும் ஓணத்தைச் சிறப்பாகக் கொண்டாட கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்தனர்.

ஓணத்தின் வரலாறு, அதைப் பற்றித் தங்களுக்குத் தெரிந்த ஒவ்வொரு விஷயத்தையும் எங்களுக்கு விரிவாகச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும், முந்தைய நாளைவிடப் பெரியதும் அழகானதுமான ஒரு புதிய பூக்கலம் போல் இருந்தது. எங்கள் காலனியில் கவனமாகப் பறித்தெடுக்கும் பூக்களையும், எங்கள் சின்னக் கைகளால் மூன்றாவது மாடிக்கு எடுத்துச் செல்ல முடிந்த அளவையும் சேர்த்து அந்தப் பூக்கலங்களை உருவாக்குவோம்.

நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன்

நடிகை ஷ்ருதி ராமச்சந்திரன்

அந்த ஓணம் பற்றிய என் நினைவுகள், அது உண்மையில் இருந்ததைவிட இன்னும் சுவாரஸ்யமாகவும், வண்ணமயமாகவும், கொஞ்சம் நாடகத்தன்மையுடனும் இருக்கலாம். ஆனால், அதைப் பற்றி எனக்கு எந்தப் புகாரும் இல்லை.

இன்று புரிகிறது, ஒவ்வொரு ஆண்டும் அந்த உணர்வையும், அந்த மகிழ்ச்சியையும் மீண்டும் உருவாக்க நான் முயற்சி செய்வேன். ஏனென்றால், நினைவுகளைப் பெரிதாக்கி, அவற்றுக்கு ஒரு அழகான ஒளி கொடுப்பதுதானே ஒரு கொண்டாட்டத்தின் உண்மையான அர்த்தம்?” எனத் தெரிவித்துள்ளார்.

Illuminating memories is the true celebration: Shruti Ramachandran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.