நடிகை காஜல் அகர்வால் திரைத்துறையில் நடிகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசியுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு சினிமா பெரிய வெளிச்சத்தைத் தந்தது. முக்கியமான முதல்வர் விஜய்யுடன் நடித்த துப்பாக்கி திரைப்படம் மிக அழகான மார்டன் நடிகை என்கிற பெயரைப் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
மேலும், ஜில்லா, மெர்சல் என ஹார்டிக் வெற்றியைக் கொடுத்தார். இந்தியன் 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். ஆனாலும், உடலைப் பேணுவதால் நாயகிக்கான தோற்றத்திலேயே இருக்கிறார். இறுதியாக, இவர் நடித்த தி இந்தியா ஸ்டோரி தோல்விப்படமானது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய காஜல் அகர்வால், “சினிமாவில் நடிகர்களைக் காட்டிலும் நடிகைகள்தான் அதிக சவால்களை எதிர்கொள்கின்றனர். நடிகைக்குத் திருமணமாகிவிட்டால் அவர்களை ஓரங்கட்டி முடக்கத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் மார்க்கெட் உச்சத்தில் இருந்தாலும் இதுதான் நடக்கிறது. ஆனால், திறமையை எப்போதும் அணை போட்டு தடுக்க முடியாது. திறமையான நடிகைகள் எந்த வயதிலும் நடிக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இங்கு பலர் இருக்கின்றனர். “ எனத் தெரிவித்துள்ளார்.
Actress Kajal Aggarwal has spoken about the challenges faced by actresses in the film industry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறுமை, வீட்டு உணவு... குழந்தை வளர்ப்பு பற்றி நடிகை காஜல் அகர்வால் கூறுவது என்ன?

மோசமான வசூல்! காஜல் அகர்வாலுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த தி இந்தியா ஸ்டோரி!

காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: காஜல் அகர்வால்
விடியோக்கள்

முதல்வர் விஜய் அடுக்கிய அறிவிப்புகள்! பேரவையில் பாராட்டு மழை! | TN Assembly | TVK | DMK




