குழந்தை வளர்ப்பு என்பது சவாலாக மாறிவரும் சூழ்நிலையில் அதுபற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வால், ஒரு தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்த அவரது சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
காஜல் அகர்வாலுக்கு 4 வயதில் 'நீல்' என்ற மகன் இருக்கிறார். தன்னுடைய குழந்தையை வளர்ப்பது குறித்து அவர் பல விஷயங்களைக் கூறியுள்ளார்.
இப்போது உணவு என்பது ஆர்டர் செய்துவிட்டால் நொடிப்பொழுதில் வீட்டிற்கு வந்துவிடுகிறது. என்னுடைய மகனும் 'ஏதாவது ஒரு உணவின் பெயரைச் சொல்லி ஆர்டர் செய்து தர முடியுமா? என்று கேட்கும்போது நான் உடனடியாக அதை வாங்கித் தருவதில்லை. உணவுக்காக சிறிது நேரம் காத்திருக்க வேண்டும் என்று கூறுவேன்.
முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளையே மகனுக்கு கொடுக்கிறோம். மிகவும் அவசர மற்றும் முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வெளியில் இருந்து உணவு வாங்குகிறேன்.
என் மகனுக்கு பொறுமையை கற்றுக்கொடுக்கிறேன். உணவு எங்கிருந்து வருகிறது, எப்படியெல்லாம் விளைவிக்கப்படுகிறது என அவனிடம் கூறுவேன். ஏனெனில் எதுவும், குறிப்பாக உணவு ஒரு சில நிமிடங்களில் கிடைத்துவிடும் என்று அவன் நினைக்கக் கூடாது. நான்கு வயது குழந்தைகளுக்கே 'பிளிங்கிட்' மற்றும் 'அமேசான் இட்' போன்ற வார்த்தைகள் தெரிந்திருக்கிறது.
ஆனால் உணவு சமைக்க மளிகைப் பொருட்கள், காய்கறிகள் என அனைத்தும் வாங்கி சமைத்து உண்ணும் பழக்கத்தை நான் கற்றுத்தர வேண்டும். சில விஷயங்களுக்காகக் காத்திருப்பது மதிப்புக்குரியது. பொறுமை என்பது ஒரு பலவீனம் அல்ல. அது ஒரு வாழ்க்கைத் திறன் என்கிறார்.
விரைவாக உணவு டெலிவரி செய்யும் தளங்களில் உணவு ஆர்டர் செய்வதில்லை என்று தெரிவிக்கிறார் காஜல் அகர்வால்.
"இதற்கு மற்றொரு காரணம் இருக்கிறது. அவ்வளவு விரைவாக உணவு எப்படி தயார் செய்யப்பட்டு வருகிறது என எனக்கு சந்தேகம் இருக்கிறது. உணவு கெட்டுப்போகாமல் இருக்க ரசாயனம் கலந்து பதப்படுத்துகிறார்களா? என்ற சந்தேகம் எல்லாம் இருக்கிறது. அதனாலே மெதுவாக உணவு டெலிவரி செய்வதேயே விரும்புகிறேன்" என்றார்.
அதேபோல நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள் ஆகியவற்றில் ரசாயனம் கலக்கப்படுகிறது, உணவுப் பொருள்கள் எதுவும் தரமாக இல்லை. உலகில் மக்கள்தொகைக்கு ஏற்ப விரைவான உணவு உற்பத்தி செய்ய ரசாயனம் கலக்கப்படுவதாக கவலை தெரிவித்த அவர், முடிந்தவரை ஆரோக்கியமான உணவை மகனுக்கு கொடுப்பதாகக் கூறுகிறார்.
கடைகளில் பால் வாங்குவதைத் தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்பட்ட பன்னீர் உள்ளிட்ட பால் பொருள்களை மகனுக்கு கொடுப்பதாகக் கூறும் அவர் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் எனக் கூறி குறிப்பிட்ட நேரத்தை மகனுடன் செலவழிக்கிறார்.
Summary
parenting: What does Kajal Aggarwal say about raising a child?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோசமான வசூல்! காஜல் அகர்வாலுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்த தி இந்தியா ஸ்டோரி!

திரைக்கதிர்

காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

நீச்சல் உடையில் நடிக்க மாட்டேன்: காஜல் அகர்வால்
விடியோக்கள்

காவிரி பிரச்னையை திசைதிருப்பவா Delimitation? - அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி




