மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

திரைக்கதிர்

அண்மைக்காலமாக தென்னிந்திய படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால்.

News image
Updated On :26 ஜூலை 2026, 4:08 am IST

பாலிவுட்டில் 'சிங்கம்', 'தோ லஃப்சோன் கி கஹானி' போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தபோதிலும், அண்மைக்காலமாக தென்னிந்திய படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால். இந்த நிலையில், நடிகை காஜல் அகர்வால் சுபங்கர் மிஸ்ராவின் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அவரிடம், 'ஹிந்திப் படங்களை ஏன் இவ்வளவு கவனமாகத் தேர்ந்தெடுக்கிறீர்?, தென்னிந்திய சினிமாவிடம் பாலிவுட் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் என்ன?, திரைத்துறையில் பெண்களைச் சித்திரிக்கும் விதம் எவ்வாறு மாறியுள்ளது?' என்பன குறித்து கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த நடிகை காஜல் அகர்வால், 'எனக்கு எப்போதும் வேலையின் தரம்தான் முக்கியம். தென்னிந்திய சினிமாவில் எனக்குக் கிடைத்த தரமான கதாபாத்திரங்கள் பாலிவுட்டில் கிடைக்கவில்லை. எண்ணிக்கையைவிட தரத்திற்கே நான் முன்னுரிமை கொடுத்தேன். தென்னிந்திய சினிமா அத்தகைய வாய்ப்புகளை எனக்குத் தாராளமாக வழங்கியபோது, நான் ஏன் பாலிவுட்டில் சாதாரணமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்?'' என்றார்.

Story image

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணம்' படத்தின் பிரத்யேக ட்ரெய்லர் திரையிடல் நிகழ்வு தில்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்றது. படக்குழுவினர் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படம் பற்றி பகிர்ந்துகொண்டனர்.

சாய் பல்லவி பேசுகையில், 'நடிகர்களுக்கு இது போன்ற கதாபாத்திரங்கள் கிடைப்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு தெய்வத்தின் கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது அத்தனை சுலபமல்ல.

அந்தப் படைப்பை மிகச் சிறந்த வடிவமாக மாற்றுவதற்குத் தங்களின் இதயத்தையும் ஆன்மாவையும் அர்ப்பணித்து உழைக்கும் ஒரு குழு கண்டிப்பாகத் தேவை.

சீதை கதாபாத்திரத்தில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு எழுதி வைத்துக்கொண்டு நடிக்கவில்லை.

நான் அமைதியாக அமர்ந்து தியானம் செய்யும்போது, 'சீதை அம்மா, நீங்கள் என் மூலமாகச் செயல்படுங்கள். என் வழியாக வெளிப்படும் நடிப்பு எதுவாக இருந்தாலும், அது இந்தத் திரைப்படத்துக்காக நீங்கள் விரும்புவதாகவே இருக்கட்டும்' என்று வேண்டிக்கொள்வேன்'' என்றார்.

Story image

உடல்நலக்குறைவால் ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான விஜய் மில்டன் அண்மையில் விடியோ பதிவு மூலம் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், 'கான்டக்ட் லிஸ்ட்டில் இனிமேல் எப்போதும் கால் பண்ணவே முடியாத, அதற்காக அந்த நம்பரை அழித்துவிடவும் முடியாத போன் நம்பர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இன்றைக்கு செழியன்.

அவரை மாதிரி அறிவார்ந்த ஒளிப்பதிவாளரை நான் பார்த்ததே இல்லை. 'கல்லூரி' படத்தில் செழியன் தான் ஒளிப்பதிவாளர். அவர் நன்றாகப் பண்ணிவிடுவாரா என்று அவருக்கும், எனக்கும் போட்டி இருந்தது. ஆனால், என்னை மிஞ்சி விட்டார். இன்றைக்கும் என்னை ஜெயித்துவிட்டார். எனக்கு முன்னாடியே அவர் சென்றுவிட்டார்.

விட்டுவிட மாட்டேன் செழியன்... பின்னாலேயே வருவேன்'' என்று நெகிழ்ந்திருக்கிறார் விஜய் மில்டன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.