
டோரதியில் நடித்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்: கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் டோரதி திரைப்படம் குறித்து பேச்சு...

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ் டோரதி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படம் மதுரையைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1990-களில் நடக்கும் கதையாக உருவான இதில் நட்பு, காதலுடன் அழுத்தமான படமாக உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், "டோரதி திரைப்படத்தின் கதையைப் படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்குதான் பெருமை. சில நாள்கள் வேலை செய்தாலும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இளையராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை.

தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாள்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல நட்புறவு உருவாகியிருக்கிறது. செப்டம்பர் 25 அன்று இப்படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
Actress Keerthy Suresh has spoken about the movie Dorothy.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







