
இசை இளையராஜா..! கீர்த்தி சுரேஷின் டோரதி பட புதிய பாடல் வெளியீடு!
”டோரதி” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது குறித்து...

டோரதி பட புதிய பாடலில்... - யூடியூப்
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “டோரதி” திரைப்படத்தின் புதிய பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் - நடிகை கீர்த்தி சுரேஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் “டோரதி”. மதுரையை மையமாகக் கொண்ட புதுமையான கதைகளத்துடன் கூடிய இப்படத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் சனந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெறும் தரத்தில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், டோரதி படத்தின் “முத்துமணி” எனும் புதிய பாடல் இன்று (ஆக. 29) படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இளையராஜா எழுதி பாடியுள்ள முத்துமணி பாடல் விடியோவை பரத் முரளிதரண் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின், கல்யாண விருந்து எனும் பாடல் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி இணையம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குத்தாட்ட இசையுடன் பாடகர் அந்தோனி தாசன் பாடிய இப்பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
A new song from the movie "Dorothy," starring actress Keerthy Suresh, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






