திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

அன்பில் அவன் என் மனதிற்குப் பிடித்த கதை: அசோக் செல்வன்

அன்பில் அவன் குறித்து அசோக் செல்வன்...

நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன்

Published On :

நடிகர் அசோக் செல்வன் அன்பில் அவன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான அன்பில் அவன் திரைப்படம் நாளை (அக். 2) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. காதல், ஆக்‌ஷன் பாணியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இப்படம் குறித்து நேர்காணலில் பேசிய நடிகர் அசோக் செல்வன், “போர் தொழில்' இயக்குநர் விக்னேஷ் ராஜாவும் நானும் இணைந்து ஒரு திரைப்படத்தில் இணைவதாக இருந்தது. ஆனால், விக்னேஷ் ராஜா, நடிகர் தனுஷ் படத்தை இயக்கினார். அதேநேரம், நான் அவரிடமிருந்து கதையை மட்டும் பெற்றுக்கொண்டு நானும் இயக்குநர் கார்த்திகேயனும் சேர்ந்து திரைக்கதையில் கூடுதலாக பணியாற்றினோம். சாதாரண, எளிய தம்பதிகள் ஒரு கனவை நோக்கிப் போக முடியுமா? அவர்களது வாழ்க்கையில் கனவுக்கு இடம் இருக்கிறதா? என்கிற கேள்விகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

என் மனசுக்குப் பிடித்த கதையை மக்களுக்குப் பிடித்த மாதிரி ‘அன்பில் அவன்' படத்தில் செய்திருக்கிறேன். நேரத்தைச் செலவு செய்து மக்கள் படத்தைப் பார்க்கிறார்கள். அதற்காக உழைப்பது மட்டுமே என் பொறுப்பு. விரும்பி ரசித்துத்தான் ஒரு வேலையைச் செய்வோம். மக்களோடு இணைவதுதான் எனக்கு முக்கியம். அன்பில் அவனில் அதைச் செய்திருக்கிறோம் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Ashok Selvan has spoken about the movie Anbil Avan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER