பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

அன்பில் அவன் படத்திற்காக 70 அடி உயரத்தில் இருந்து குதித்த அசோக் செல்வன்!

அன்பில் அவன் படத்திற்காக நடிகர் அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து நீரில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

70 அடி உயரத்தில் இருந்து குதித்த அசோக் செல்வன்

Published On :

அன்பில் அவன் படத்திற்காக நடிகர் அசோக் செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து கயிறு ஏதுமின்றி நீரில் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படத்தின் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ளார்.

ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு போர்த்தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்குப் பிறகு அசோக் செல்வன் நாயகனாக நடித்து எந்தத் திரைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில், அன்பில் அவன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

காதல் மற்றும் ஆக்‌ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் செப். 17 அன்று வெளியானது. டிரைலரின் இறுதியில் அசோக் செல்வன் மலை மேலிருண்டு நீரில் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.

அந்தக் காட்சியைப் படமாக்கிய விதம் பற்றி ஒரு விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அசோக் செல்வன் டூப் மற்றும் கயிறு ஏதுமின்றி 70 அடி உயரத்தில் இருந்து தானாகவே நீரில் குதித்ததாகவும், அந்தக் காட்சியைப் படமாக்கியது பற்றியும் அந்த விடியோவில் படக்குழுவினர் பேசியுள்ளனர்.

படத்திற்காக அவர் எடுத்த மிகப்பெரிய ரிஸ்க் இது என்றும் பட இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அன்பில் அவன் திரைப்படம் வருகிற செப்.25 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Summary

A scene was filmed for the film Anbil Avan where actor Ashok Selvan jumps into water from a height of 70 feet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER