ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு இதெல்லாம் காரணங்கள்: காஜல் அகர்வால்

விவாகரத்துகள் குறித்து காஜல் அகர்வால் பகிர்வு...

காஜல் அகர்வால்

Published On :

நடிகை காஜல் அகர்வால் விவாகரத்துகள் குறித்து தன் எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்திய அளவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தற்போது பாலிவுட்டிலும் தெலுங்கிலும் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு மகன் ஒருவர் இருக்கிறார். ஆனாலும், உடலைப் பேணுவதால் நாயகிக்கான தோற்றத்திலேயே இருக்கிறார். இறுதியாக, இவர் நடித்த தி இந்தியா ஸ்டோரி தோல்விப்படமானது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை காஜல் அகர்வால் தற்போது சமூகத்தில் அதிகரித்துவரும் விவாகரத்துகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

முக்கியமாக, “தம்பதிகளுக்குள் ஆரோக்கியமான உரையாடல்கள் இல்லாததே விவாகரத்துகளுக்குக் காரணம். சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவிடுவதால் பலரும் தங்களின் துணைகளுடன் மனம்விட்டு பேசுவதில்லை. உணவகத்திற்குச் சென்றால்கூட கணவரும் மனைவியும் அவரவர் செல்போன்களில் கவனம் செலுத்தி இவர்களுக்குள் நடக்க வேண்டிய பேச்சுவார்த்தைகளை இல்லாமல் செய்துவிடுகின்றனர். மேலும், சகிப்புத்தன்மையின்மையும் இணையும் போது விவாகரத்துகள் அதிகரிக்கின்றன.

ஆரோக்கியமான உறவுகளுக்கு உரையாடல்களே முக்கியமானது. நானும் என் கணவரும் உணவகங்களுக்குச் சென்றால் இருவரும் பேசுவதையே விரும்புகிறோம். அந்த நேரத்தில் செல்போன் பயன்பாடு இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

Actress Kajal Aggarwal has shared her thoughts on divorce.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.