மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

திருமணத்தில் நம்பிக்கை இல்லை: ஷ்ருதி ஹாசன்

திருமணம் குறித்து ஷ்ருதி ஹாசன் பேச்சு வைரல்...

ஷ்ருதி ஹாசன்

Published On :

நடிகை ஷ்ருதி ஹாசன் திருமண வாழ்க்கை குறித்து கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் நடிகை ஷ்ருதி ஹாசன் மும்பை உயர் நீதிமன்றத்தில் தன்னுடைய போலி ஏஐ புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை சமூக வலைதங்களிலிருந்து நீக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தார். விசாரணை முடிவில் உயர்நீதிமன்றம் ஷ்ருதி ஹாசன் தொடர்பான போலியான ஏஐ உருவாக்கங்களை நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஷ்ருதி ஹாசன், “எனக்கு திருமணத்தில் பெரிய நம்பிக்கையில்லை. ஒருமுறை திருமணம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், அந்த அனுபவம் பயத்தைத் தரவில்லை. ஒரு துணையுடன் இணைந்து நேசத்துடன் வாழ்வது முக்கியம் என்றாலும் அதற்கு திருமணத்திற்கான ஆவணங்கள் தேவையில்லை. எனக்கு தாய்மை மீது ஆர்வம் உள்ளது. எதிர்காலத்தில் தத்து எடுப்பது குறித்தோ அல்லது உயிரியல் தாயாக ஆவது குறித்தோ முடிவு எடுப்பேன்.” என்றார்.

மேலும், “ஆண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் சூழல் இருந்தால், பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறையை வேலை ஒப்பந்தத்திலேயே சேர்த்திருப்பார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

Actress Shruti Haasan has responded to a question about married life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.