உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

நடிகர் சுஹாஸை பாராட்டிய கமல் ஹாசன்!

நடிகர் கமல் ஹாசனிடமிருந்து பாராட்டுகளைப் பெற்ற சுஹாஸ்...

நடிகர்கள் கமல் ஹாசன், சுஹாஸ்

Published On :

மண்டாடி திரைப்படத்தில் நடித்த சுஹாஸை நடிகர் கமல் ஹாசன் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ராமநாதபுர மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான மண்டாடி திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் சுஹாஸ்.

தெலுங்கில் குறிப்பிடத்தகுந்த நடிகரான இவர் தமிழில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே சாட்டபுலி என்கிற கதாபாத்திரத்தில் காத்திரமான நடிப்பைக் கொடுத்து வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் மண்டாடி திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதில், சுஹாஸ் நடிகர் கமல் ஹாசனைச் சந்தித்தது குறித்த பதிவில், “ சில தருணங்கள் உங்களை முழுமையாக பேச முடியாத அளவிற்கு செய்துவிடும். நடிப்பின் என்சைக்ளோபீடியா, வாழும் லெஜெண்ட் கமல் ஹாசன் சாருடன் அருகே நிற்கிறேன். ஒரு நனவான கனவு. பெரிய கௌரவம். எப்போதும் பாதுகாக்கும் ஒரு நினைவு” எனக் கூறியுள்ளார்.

Actor Kamal Haasan has praised Suhas, who acted in the movie Mandaadi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.