
வெளியீட்டுக்குத் தயாராகும் இந்தியன் - 3?
இந்தியன் - 3 திரைப்படம் குறித்து...

நடிகர் கமல் ஹாசன்
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் - 3 திரைப்படத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனராம்.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது.
லஞ்சம் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டு உருவான இப்படம் இணைய கிண்டல்களையும் எதிர்கொண்டது. ஆனாலும், அதில் இடம்பெற்ற இந்தியன் - 3 டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்தது.
மேலும், இந்தியன் - 2 தோல்வியால் இந்தியன் - 3 படப்பிடிப்பில் மேற்கொண்டு செலவு செய்ய லைகா விரும்பாததால் படத்தைக் கைவிடும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இப்படத்தின் பணிகளை இயக்குநர் ஷங்கரும் நடிகர் கமல் ஹாசனும் மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இப்படத்தை விரைவில் வெளியிடும் பணிகளையும் லைகா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
Plans are reportedly underway to release the film Indian 3, starring Kamal Haasan, soon.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






