மதுரையில் முதல்வர் விஜய் சாலைவலம்!ஒரு ஓட்டில் தோல்வி: திமுக முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் மனு நிராகரிப்பு பெங்களூரு: தரையில் மோதிய இண்டிகோ விமானத்தின் வால் பகுதி! ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி!தங்க மோதிரத்தை விட தரமான பால்தான் குழந்தைகளுக்கு தேவை: தமிழிசை சௌந்தரராஜன் செஸ் ஒலிம்பியாட்: பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஹரியாணாவில் 250 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி பலி! கோவை தனியார் பள்ளியில் தீ விபத்து! விடுமுறையால் தப்பிய மாணவர்கள்!போக்சோ வீரமணி வழக்கு: முதல்வர் விஜய், அமைச்சர்களிடம் விசாரிக்க வேண்டும்! திமுக மனு

சினிமாவில் பிறந்த ஜென் ஸி தலைமுறையில்... நன்றி சொன்ன கமல் ஹாசன்!

சினிமாவில் 67 ஆண்டுகளை நிறைவு செய்த கமல் ஹாசன்...

நடிகர் கமல் ஹாசன்

Published On :

நடிகர் கமல் ஹாசன் தன்னை வாழ்த்தியவர்களுக்கு நன்றி சொல்லி பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் ஆரம்பித்த சினிமா பயணத்தை தற்போது 67 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் நீண்ட காலம் திரைத்துறையிலிருந்தவர்கள் பட்டியலிலும் இடம்பெற்றதால் பலரும் கமல் ஹாசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”67 ஆண்டுகளாக நான் சினிமாவில் பயணித்ததற்காக எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

அந்த 67 ஆண்டுகளில், உண்மையான கற்றல் என்று நான் சொல்லக்கூடியது சுமார் 20 ஆண்டுகள் மட்டுமே. மீதமுள்ள காலம், கழிவுநீரின் ஓட்டத்தோடு நானும் போய்க்கொண்டிருந்தது போலத்தான்.

ஆனால் நம்பிக்கையூட்டும் விஷயம் என்னவென்றால், அந்த நீர்வழி எவ்வளவு இருண்டதாக மாறினாலும், இறுதியில் ‘கூட்டு சினிமா’ எனப்படும் எந்தக் கால்வாயாலும் கட்டுப்படுத்த முடியாத கடலுடன் சங்கமிக்கும் நாளுக்கு நாம் காத்திருக்கிறோம். கலைஞர்கள், பார்வையாளர்கள் என நாம் அனைவரும் அந்தக் கடலை நோக்கியே பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

1895 டிசம்பரில் லூமியர் சகோதரர்கள் நடத்திய முதல் பொதுத் திரைப்படத் திரையிடலிலிருந்து கணக்கிட்டால், திரைப்படத் துறைக்கு சுமார் 130 ஆண்டுகளும் 8 மாதங்களும் ஆகின்றன. அந்த மொத்த வரலாற்றில் 67 ஆண்டுகளாக நான் இருந்திருக்கிறேன். அதாவது, சினிமாவின் முழு வரலாற்றில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை நான் கடந்து வந்திருக்கிறேன் என என் குழுவினர் எனக்கு நினைவுகூறினர்! இது உண்மையிலேயே வியப்பூட்டும் சிந்தனைதான்.

இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை, அதில் சுமார் 20 ஆண்டுகளை மட்டுமே உண்மையான கற்றல் என்று நான் கருத முடியும். சினிமாவில் பிறந்த ஜென் ஸி (Gen Z) தலைமுறையின் மிகப் பழமையான உறுப்பினராக நான் இருக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Kamal Haasan has posted a message thanking those who wished him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.