மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

கட்டாயம் பார்க்க வேண்டும்... ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்!

தி ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டினார் நடிகர் கமல் ஹாசன்...

நடிகர் கமல் ஹாசன்

Published On :

நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலனின் தி ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டியுள்ளார்.

கிரேக்க காவியமான ஹோமரின் ’தி ஒடிசி’ கவிதையைத் தழுவி இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன் ஒடிசி திரைப்படத்தை மிகச் சவாலாக முழுமையாக ஐமேக்ஸ் கேமராவில் படமாக்கினார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் ஜூலை 17ஆம் தேதி இப்படம் வெளியானது. தொழில்நுட்ப ரீதியாக ஆச்சரியப்படுத்தினாலும் திரைக்கதையால் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் இப்படம் குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஹோமர் கனவு கண்டார். நோலன் முடிக்க நினைத்தார். நான் மனதாரப் பாராட்டுகிறேன். சினிமாவின் குழந்தைகளே, இந்தத் திரைப்படம் காலம் கடந்து நிற்கும். கட்டாயம் பாருங்கள்! தி ஒடிசி உலகம் முழுவதும் தனது காவியப் பயணத்தைத் தொடரும் வேளையில், அதற்கான எனது புகழ் கவிதை இந்தியாவின் திரையரங்குகளில் பார்வையாளர்களைச் சென்றடையவுள்ளது. அதை விரைவில் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Kamal Haasan has praised director Christopher Nolan's film The Odyssey.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.