நடிகர் கமல் ஹாசன் திரைத்துறையில் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234 படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.
தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் தயாரிப்பதாக அறிவித்தது.
இதில், சேயோனின் முதல்கட்ட படப்பிடிப்பு மதுரையில் முடிந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதற்கிடையே, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் ரஜினி 173 படத்தின் படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.
இதுபோக, அன்பறிவ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் விரைவில் துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரே நேரத்தில் ராஜ்கமல் நிறுவனம் மூன்று திரைப்படங்களைத் தயாரித்து வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் கமல் ஹாசன் சினிமாவில் 67 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக ராஜ்கமல் நிறுவனம் போஸ்டர் மற்றும் விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இதில், “ஒரு குழந்தை... ஒரு தொடக்கம்... ஒரு அபாரம்... ஒரு சகாப்தம்” எனக் குறிப்பிட்டுள்ளது கமல் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actor Kamal Haasan has completed 67 years in the film industry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்டாயம் பார்க்க வேண்டும்... ஒடிசி திரைப்படத்தைப் பாராட்டிய கமல் ஹாசன்!

சிஜேபி வெற்றிக்கு வித்தியாசமாக வாழ்த்திய கமல்..! ஆதரவும் கேலியுமாக வைரலான பதிவு!
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் நடிக்கும் கமல் ஹாசன்?

போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோதே நாடு தோற்றுவிட்டது! கமல் ஹாசன்
விடியோக்கள்

ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு | Aadi Ammavasai | Thithi tarpanam | Srirangam amma mandapam




