தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

இது காலத்தினால் செய்த நன்றி... தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் கமல் ஹாசன்!

பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அறிவித்ததற்கு கமல் பாராட்டு தெரிவித்துள்ளார்...

நடிகர் கமல் ஹாசன், முதல்வர் விஜய்

Published On :25 ஆகஸ்ட் 2026, 11:51 am IST

நடிகர் கமல் ஹாசன் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம அமைக்க உள்ளதாகச் சொன்ன தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ”மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இது காலத்தினாற் செய்த நன்றி.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி இயக்குநர் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்கிற அறிவிப்புக்கு இயக்குநர் சங்கம் சார்பாக நன்றி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Actor Kamal Haasan has praised the Tamil Nadu government for its announcement to build a memorial hall for the late director Bharathiraja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.