
வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்: நடிகர் சூரி
நடிகர் சூரியை நேரில் அழைத்துப் பாராட்டிய கமல் ஹாசன்...

நடிகர்கள் கமல் ஹாசன், சூரி.
நடிகர் கமல் ஹாசன் மண்டாடி திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ராமநாதபுர மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய விளையாட்டான பாய்மரப்படகுப் போட்டியை மையமாக வைத்து உருவான மண்டாடி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றது.
நடிகர் சூரிக்கும் தொடர் வெற்றியாக அமைந்துள்ளதால் அடுத்தடுத்து சூரி நடிக்கும் படங்களின் மீதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசன் மண்டாடி திரைப்படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வை மகிழ்வுடன் பகிர்ந்த நடிகர் சூரி, “வாழ்க்கையில் மறக்கவே முடியாத தருணங்களில் ஒன்று. கமல் சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் சினிமா பயணத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய நம்பிக்கை, புதிய வெளிச்சம். மண்டாடி குறித்து அவர் பகிர்ந்த பார்வை வாழ்நாள் முழுவதும் என்னை வழிநடத்தும் ஆசீர்வாதம்!” எனக் கூறியுள்ளார்.
Actor Kamal Haasan personally invited the soori film crew and commended them.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






