முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

இந்த சாதனைச் செய்த முதல் நடிகரானார் சூரி!

மண்டாடி திரைப்படத்தால் சூரிக்கு புதிய பெருமை கிடைத்துள்ளது...

நடிகர் சூரி

Published On :

நடிகர் சூரி மண்டாடி திரைப்படம் மூலம் புதிய சாதனையைச் செய்துள்ளார்.

இந்திய சினிமா வரலாற்றில் நேரடியாகவே ஆயிரக்கணக்கான நடிகர்கள் கதாநாயகனாக அறிமுகமானாலும் வில்லனாக, குணச்சித்திர நடிகராக இருந்து பின் நாயகனானவர்களும் பெரிய இடங்களை அடைந்திருக்கின்றனர். தமிழ் மொழி என்றில்லாமல் பல மொழிகளிலும் இந்தப்போக்கு உள்ளது.

அதிலும், நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும் போது பெரும்பாலும் நகைச்சுவையான திரைப்படங்களையே கையில் எடுப்பர். தமிழில் சந்திரபாபு, என். எஸ். கிருஷ்ணன், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என திரையில் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்கள் பலரும் கதாநாயகனாக நடித்தும் வெற்றிகளைப் பெற்றனர்.

ஆச்சரியப்படும் விதமாக இந்தப் பட்டியலில் இணைந்த நடிகர் சூரி அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்கிற பிம்பத்தையே உடைத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக வலம்வந்த சூரி விடுதலை திரைப்படம் மூலம் நாயகனானார். அப்படம் கொடுத்த வெளிச்சத்தால் கொட்டுக்காளி, கருடன் என அடுத்தடுத்த வித்தியாசமான கதைகளில் நடித்து கவனிக்க வைத்தார். மேலும், மாமன் திரைப்படத்தின் மூலம் மார்க்கெட் உள்ள ஹீரோவாகவும் மாறினார்.

Story image

தற்போது, நடிகர் சூரி நடிப்பில் அண்மையில் வெளியான மண்டாடி திரைப்படமும் உலக அளவில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சூரியை நட்சத்திர நடிகராக மாற்றியுள்ளது. மேலும், இந்திய சினிமாவில் நீண்ட காலமாக நகைச்சுவை நடிகராக இருந்து நாயகன் ஆனோர் பட்டியலில் அதிகம் வசூலித்த நடிகர் என்கிற சாதனையையும் சூரி பெற்றுள்ளார்.

The movie mandaadi, starring actor Soori, has neared the ₹100 crore mark in box office collections.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.