உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரைபயிா்க் கடன் நிலுவை வசூலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவு

எப்படி கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்? நடிகர் சூரி விளக்கம்!

நடிகர் சூரி தன் கதைத் தேர்வுகள் குறித்து பேசியுள்ளார்...

நடிகர் சூரி

Published On :

நடிகர் சூரி தான் நடிக்கும் திரைப்படங்களைத் தேர்வு செய்வது குறித்து பேசியுள்ளார்.

நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாகும் போது பெரும்பாலும் நகைச்சுவையான திரைப்படங்களையே கையில் எடுப்பர். தமிழில் சந்திரபாபு, என். எஸ். கிருஷ்ணன், கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என திரையில் வெற்றிகரமான நகைச்சுவை நடிகர்கள் பலரும் கதாநாயகனாக நடித்தும் வெற்றிகளைப் பெற்றனர்.

ஆச்சரியப்படும் விதமாக இந்தப் பட்டியலில் இணைந்த நடிகர் சூரி அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்து தான் ஒரு நகைச்சுவை நடிகர் என்கிற பிம்பத்தையே உடைத்துள்ளார்.

விடுதலை திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, கொடுக்காளி, கருடன், மாமன் என ஒவ்வொரு திரைப்படங்களிலும் தன்னை வளர்த்துக்கொண்டு நாயகனாக வரவேற்பைப் பெற்றார். அண்மையில், சூரி நடித்து வெளியான மண்டாடி திரைப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அடுத்ததாக, இயக்குநர் ராம் இயக்கத்தில் நடித்து முடித்த ஏழு கடல் ஏழு மலை திரைப்படம் வெளியாகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட சூரியிடம் இயக்குநர் மிஷ்கின், “ரசிகர்களிடம் நல்ல நாயகன் கிடைத்துவிட்டான் என்கிற எண்ணத்தை விதைத்துவிட்டீர்கள். தொடர்ந்து, கதையம்சமுள்ள திரைப்படங்களிலும் நடிக்கிறீர்கள். நீங்கள் எப்படி கதைகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்? எனக் கேட்டார்.

இதற்கு நடிகர் சூரி, “என்னை பொறுத்தவரை கதை கேட்கும்போது அதில் நேர்மையும் உண்மைத்தன்மையும் இருக்கிறதா என்றும் அங்கு என்னைப் பொருத்திக்கொள்ள முடிகிறதா என்றும் பார்ப்பேன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது” என்றார். இப்பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

Actor Soori has spoken about how he selects the films he acts in.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.