வெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

நான் மலையாள சினிமாவின் பெரிய ரசிகை: ஷ்ருதி ஹாசன்

மலையாள சினிமா குறித்து ஷ்ருதி ஹாசன்...

ஷ்ருதி ஹாசன்

Published On :

நடிகை ஷ்ருதி ஹாசன் மலையாள சினிமா குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இவர் நடித்த பான் இந்திய திரைப்படமான சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.

தொடர்ந்து, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் ஷ்ருதிக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது, நடிகர் துல்கர் சல்மானுடன், ’ஆகாஷம் லோ ஒக்க தாரா’ என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஷ்ருதி ஹாசன், “நான் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ரசிகை. இன்னும் மலையாளத்தில் நடிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை. எப்போதும் அந்த ஆசை இருந்துகொண்டேதான் இருக்கிறது. சரியான கதைக்காகக் காத்திருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். இதனால், விரைவிலேயே ஷ்ருதி மலையாள சினிமாவில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Shruti Haasan has spoken about Malayalam cinema.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.