
அவர்கள் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள்: சிவகார்த்திகேயன்
நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பில் சிவகார்த்திகேயன் பேச்சு...

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் தன் நற்பணி மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி, பராசக்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மதுரையைப் பின்னணியாக வைத்து உருவாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு படப்பிடிப்புகளிலும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், இன்று சிவகார்த்திகேயன் தன் நற்பணி மன்ற நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “நம்முடைய நோக்கம் என்ன என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். விமர்சிப்பவர்கள் எப்போதும் விமர்சித்துக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால், நாம் அனைவரும் அன்பினால், அன்புக்காக ஒன்றாக இருக்கிறோம். நன்றாக படியுங்கள். நன்றாகச் சம்பாதியுங்கள். முதலில் குடும்பம்தான் முக்கியம். தினமும் 15 நிமிடங்களாவது புத்தகங்களைப் படியுங்கள். படிக்க, படிக்க நம் சிந்தனை மேம்படும். அது, சமூக வலைதளங்களிலிருந்து விலகியிருக்க மாற்றாகவும் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Actor Sivakarthikeyan has met the office-bearers of his fan club in person.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






