வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சமூக பாதுகாப்புத் துறையின்கீழ், வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பதவிக்கு தகுதியானவர் நியமிக்கப்பட உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப் பயிற்சியும், கணினி இயக்குவதில் ஓராண்டு முன்அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம் தட்டச்சில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 2018 ஏப்ரல் 1-இல் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தகுதியுடைய நபர்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று, அதனை பூர்த்தி செய்து, வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் வேலூர் அண்ணா சாலை, சுற்றுலா மாளிகை எதிரில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0416 -2222310 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும் - ஜி.கே.வாசன்

ரூ. 3.85 லட்சம் திருடியதாக இனிப்பக ஊழியா் கைது
பழைய காரை இணையதளம் மூலம் விற்பதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது
தில்லி, ஹரியாணா, பஞ்சாப், உ.பி. உள்பட 5 மாநிலங்களில் காா் திருட்டு மோசடி: 10 போ் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

