ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  

Updated On :9 ஏப்ரல் 2018, 11:08 pm

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் தொழிற்சாலை, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆம்பூர் புறவழிச் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் எம்.ஞானதாஸ் தலைமை வகித்தார்.  
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென புறவழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீஸாருக்கும், சமத்துவ மக்கள் கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 25 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.