கிராமப்புற பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்எல்ஏ சு.ரவி கேட்டுக் கொண்டார்.
அரக்கோணத்தை அடுத்த சயனபுரம் ஊராட்சி, புதுக்கண்டிகை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ. 11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:
கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் தற்போது ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து நகரப் பகுதிகளில் உள்ள ஆங்கிலப் பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
கிராமப்புறங்களில் நல்ல சூழ்நிலைகளில் கல்வி கற்க ஏதுவாக புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படுகின்றன.
இக்கட்டடங்களை நல்ல முறையில் ஆசிரியர்கள் பராமரித்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கெளரி தலைமை வகித்தார். நெமிலி வட்டார உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) எஸ்.ஆர்.பால்ராஜ், வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.ஜி.விஜயன், அதிமுக நிர்வாகிகள் நாகராஜன், குப்பன், சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... திமுக – அதிமுக கூட்டணியும் அரைகுறை உண்மையும்!

மாஃபியாவின் பிடியில் கல்வி அமைப்புமுறை: கேஜரிவால் குற்றச்சாட்டு
இன்றைய ராசி பலன் (31.05.2026) - விருச்சிகம்

இன்றைய ராசி பலன்கள் (மே 31 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு அமைதி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


