திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மூளைச்சாவு அடைந்த கல்லூரி பேராசிரியரின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த சித்தூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியரின் உடலுறுப்புகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மூலம் தானம் செய்யப்பட்டன.

Updated On :19 ஏப்ரல் 2018, 1:14 am IST

மூளைச்சாவு அடைந்த சித்தூரைச் சேர்ந்த தனியார் கல்லூரிப் பேராசிரியரின் உடலுறுப்புகள் வேலூர் சிஎம்சி மருத்துவமனை மூலம் தானம் செய்யப்பட்டன. அவரது உடலுறுப்புகள் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், ராம்நகர் காலனியைச் சேர்ந்தவர் ஏ.வி.ரமணாரெட்டி (58). இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சாந்தி. கடந்த திங்கள்கிழமை ரமணாரெட்டி, தனது அடுக்குமாடி வீட்டின் 2-ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு ரமணாரெட்டி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலுறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். 
இதையடுத்து ரமணாரெட்டியின் கண்கள், கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை சிஎம்சி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும் தானமாக அளிக்கப்பட்டன. இந்த உடலுறுப்புகள் மூலம் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக சிஎம்சி மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.