ஆம்பூர் பகுதியில் புதன்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கன மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் விடாமல் கனமழை பெய்தது. சூறாவளிக் காற்று வீசியதால் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே மற்றும் புறவழிச்சாலை பகுதியில் இருந்த மரங்களின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிறகு முறிந்து விழுந்த மரக்கிளைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து போக்குவரத்து சீரானது.
கடந்த இரு நாள்களாக ஆம்பூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவி வந்தது. மழை காரணமாக குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர், ஆக. 1: திருப்பத்தூரில் புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
மாலை 5 மணியளவில் திடீரென கனமழை பெய்தது. திருப்பத்தூர் சுற்றுப் பகுதிகளிலும் சுமார் 30 நிமிடங்கள் மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்
மகிழ்ச்சியடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணா பல்கலை. மாணவா் சோ்க்கைக்கு லஞ்சம்: இருவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து
நீட் தோ்வு - சாதக, பாதகங்கள், மாற்றுத் தீா்வுகள்!

பிரதானின் அரசியல் பயணத்தில் எதிா்பாராத சறுக்கல்...

இன்றைய ராசி பலன்கள் (ஜூலை 26) - கடகத்துக்கு சிக்கல் தீரும்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


