இளம் படைப்பாளர் விருது பெற மாவட்ட அளவில் மாணவர்களுக்கு கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள் வேலூரில் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
பொது நூலகத் துறை சார்பில் ஆண்டுதோறும் இளம் படைப்பாளர் விருது பெறுவதற்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இந்த ஆண்டுக்கான போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் 12-ஆம் வகுப்பு என இரு பிரிவுகளாக வட்ட அளவில் பேச்சு, கவிதை, கட்டுரைப் போட்டிகள் வேலூரில் நடத்தப்பட்டன.
வேலூர், அரக்கோணம், வாணியம்பாடி, ஆற்காடு, குடியாத்தம், திருப்பத்தூர், வாலாஜாபேட்டை ஆகிய 7 இடங்களில் நடைபெற்ற இப்போட்டிகளில் 84 மாணவ, மாணவிகள் தேர்வு பெற்றனர். இவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலர் ஆனந்தன் தலைமை வகித்தார். மைய நூலகர் ரவி முன்னிலை வகித்தார். கண்காணிப்பாளர் சிவகுமார் வரவேற்றார். ஆட்சியர்
எஸ்.ஏ.ராமன் போட்டியைத் தொடங்கி வைத்தார்.
இதில், "வாசித்தேன் உயர்ந்தேன்' என்கிற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், "என் எதிர்காலம் என் கையில்' என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், "வாழ்வுக்கு உயர்வு தருவது வாசிப்பு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும் நடத்தப்பட்டன. இதில், 3 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!

தனுஷ் நடித்த ஓம் திரைப்படத்தின் முதல் பாடல் புரோமோ!
நியூயார்க் மேயர் வெறுப்பைப் பரப்புகிறார்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


