தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும்

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 7:19 pm

பி.பாபு

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமேட்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள சுமார் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு குரோமேட்ஸ் அண்டு கெமிக்கல்ஸ் லிமிடெட் என்ற தொழிற்சாலை தொடங்கப்பட்டது. இங்கு, தோல் தொழிற்சாலைகளில் தோல் பதனிட தேவையான குரோமிய தாதுவில் இருந்து சோடியம் பை குரோமேட், குரோமியம் சல்பேட், சோடியம் சல்பேட் போன்ற ரசாயன பொருள்கள் தயாரித்து விநியோகிக்கப்பட்டு வந்தன. தொழிற்சாலை வளாகத்தின் திறந்த வெளியில் குவித்து வைக்கப்பட்ட குரோமிய திடக் கழிவுகளால் ராணிப்பேட்டை பாலாறு மற்றும் நீர்நிலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இதையடுத்து 1995-ஆம் ஆண்டு இந்தத் தொழிற்சாலை நிரந்தரமாக மூடப்பட்டது. ஆனால் தொழிற்சாலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் அகற்றப்படவில்லை.  
இந்நிலையில் கடந்த 2006-ஆம் ஆண்டு பிளாக்ஸ் மித் இன்ஸ்டிடியூட் என்ற அமெரிக்க  சுற்றுச்சூழல் அமைப்பானது நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்து மாசடைந்துள்ளதாக அறிக்கை சமர்ப்பித்தது. இதையடுத்து குரோமியக் கழிவுகளை அகற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வந்தன.
குரோமியக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் சார்பில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதன் பேரில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முன்னணி சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆலோசனை நிறுவனமான  உதங (உய்ஸ்ண்ழ்ர்ய்ம்ங்ய்ற் தங்ள்ர்ன்ழ்ஸ்ரீங் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற்), கடந்த 2014-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புது தில்லியில் உள்ள மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை பொறியாளர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் குரோமிய திடக்கழிவுகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது. 
அப்போது, தொழிற்சாலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குரோமியக் கழிவுகளை பாதுகாப்பாக  அகற்றுவது குறித்து திட்ட வரைவு அறிக்கை ஓர் ஆண்டுக்குள் தயாரித்து அளிக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் ரூ. 100 கோடி செலவில் 3 ஆண்டுகளில் கழிவுகளை அகற்ற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சிப்காட்டை சுற்றியுள்ள நீர் நிலைகள், ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகளில் நீர் மாதிரிகளை சேகரித்தனர். 
இந்நிலையில், குரோமியக் கழிவுகளை 3 ஆண்டுகளுக்குள் பாதுகாப்பாக அகற்றப்படும் என்ற அதிகாரிகள் தெரிவித்தும் இதுவரை அகற்றப்படாமல் உள்ளது குறித்து பொதுமக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும்  கேள்வி எழுப்பியுள்ளனர். 
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரத்தில் நிலம், நீர், காற்று மாசுபட காரணமாக இருக்கும் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுளை பிரதமரின் தூய்மை  இந்தியா திட்டத்தின் கீழ் அகற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ராணிப்பேட்டை எம்.பி., எம்எல்ஏ, மாவட்ட அதிகாரிகள் ஆகியோர் மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.