ரம்ஜான் பண்டிகையையொட்டி, ராணிப்பேட்டை வாரச்சந்தையில் வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற வாரச்சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச்சந்தையும் ஒன்று. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடு, மாடு உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் இச்சந்தைக்கு வருவது வழக்கம்.
இந்த வாரச்சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின்போது இச்சந்தையில் காய்கறிகள், கோழி, ஆடுகளின் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சிறப்பு சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூர் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன.
அதன்படி, வெள்ளிக்கிழமை முழுவதும் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Summary
Traders said that sales of goats were higher than usual as the Muslim community flocked to the Ranipet weekly market to buy goats during the Ramadan festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










