சாலையில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்பு
வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.


வேலூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஏழு பேர் திங்கள்கிழமை மீட்கப்பட்டனர்.
வாணியம்பாடி, ஆம்பூர் மற்றும் வேலூர் சுற்றுப் பகுதிகளில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோர் சுற்றித் திரிவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் உத்தரவின்பேரில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி, திருப்பத்தூர் மனநலக் காப்பகத்தின் நிர்வாகி ரமேஷ் மற்றும் ஊழியர்கள் திங்கள்கிழமை வேலூர், சுற்றுப்பகுதிகளில்
திரிந்த 4ஆண்கள், 3 பெண்களை மீட்டனர். மீட்கப்பட்டவர்களை திருப்பத்தூர் மனநலக் காப்பகத்துக்கு அழைத்து வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...