எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அரசு மதுக் கடை சுவரில் துளையிட்டு பணம் திருட்டு

வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:02 am

DIN

வாணியம்பாடியில் அரசு மதுபானக் கடையின் சுவரில் துளையிட்டு, ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் ஏரிகரை அருகே தனியாருக்குச் சொந்தமான வாடகைக் கட்டடத்தில் அரசு மதுபானக் கடை இயங்கி வருகிறது. இங்கு விற்பனையாளர்களாக  விநாயகம், மேகநாதன் ஆகிய இருவரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல் இருவரும் கடையைப் பூட்டிச் சென்றனர்.  இதையடுத்து மர்ம நபர்கள் நள்ளிரவில் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே இருந்த ரூ. 3 ஆயிரம் ரொக்கத்தை மட்டும் திருடிச் சென்றனர். விற்பனையாளர்கள் சனிக்கிழமை காலை கடையைத் திறந்தபோது பணம் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சனிக்கிழமை இரவு வரை புகார் எதுவும் தரப்படாததால் வழக்குப் பதிவு 
செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.