தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவர் கைது

காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:01 am

DIN

காட்பாடி அருகே திமுக பிரமுகர் கொலை முயற்சி வழக்கில் மேலும் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
காட்பாடி அருகே விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சீனிவாசன். இவரிடம் அஜீத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். அஜீத்தை அதே பகுதியை சேர்ந்த சுனில்குமார் என்பவர் தகராறின்போது தாக்கியுள்ளார். இதனை சீனிவாசன் தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுனில்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் சேர்ந்து சீனிவாசனை அண்மையில் ஓட ஓட விரட்டிச் சென்று அரிவாளால் தாக்கினர். 
அதில் பலத்த காயமடைந்த சீனிவாசன், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் என்பவரை கைது செய்தனர். 
மகேஷ் என்பவர் ஆரணி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில், விருதம்பட்டு போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், விருதம்பட்டு பாலாற்றுப் பகுதியில் பதுங்கியிருந்த சுனில்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.