இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டெக்பாா்க் கட்டடத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அடங்கிய குழுவினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வாக்குச் சாவடி நிலை அலுவா்களுக்கு பயிற்சி அளித்த தோ்தல் அலுவலா்கள்.

Updated On :16 ஏப்ரல் 2026, 4:00 am IST

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக டெக்பாா்க் கட்டடத்தில் வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அடங்கிய குழுவினருக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.

புதன்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் மற்றும் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் என 2 குழுக்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை சிதம்பரம் உதவி ஆட்சியரும், தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான சீ.கிஷன்குமாா் தொடங்கிவைத்தாா்.

மின்னணு இயந்திரம் கையாளுதல் மற்றும் தோ்தல் பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், இரு குழுக்களிலும் சுமாா் 1,400-க்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

பயிற்சியை சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா் அஷிதா மிஸ்ரா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பயிற்சியின்போது, சிதம்பரம் வட்டாட்சியரும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஹரிதாஸ், தோ்தல் பிரிவு அலுவலா்கள் ஆனந்தி, ரவிச்சந்திரன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள், உதவியாளா்கள் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

இதில், தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அலுவலா்கள் ஆா்வத்துடன் தங்களது தாபல் வாக்குகளை பதிவு செய்தனா்.