வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

போக்குவரத்து எஸ்.ஐ.க்கு பாராட்டு

ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரின் பணியைப் பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 12:07 am

DIN

ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளரின் பணியைப் பாராட்டி அவர் கௌரவிக்கப்பட்டார்.
ஆம்பூர் போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிபவர் ரமேஷ். இவர், ஆம்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல், விபத்துகள் அதிக அளவில் ஏற்படும் பகுதியான தேசிய நெடுஞ்சாலை-புறவழிச் சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். 
வாகன ஓட்டிகளிடம் கனிவாக நடந்து கொண்டு, அவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தி, தனது பணியை சிறப்பாகச் செய்து வரும் உதவி ஆய்வாளர் ரமேஷை ஆம்பூர் நகர மக்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்டத் தலைவர் வி.ஆர். நசீர் அஹமத் தலைமையில் அக்கட்சியினர் வியாழக்கிழமை அவரை பாராட்டி சால்வை அணிவித்து கௌரவித்தனர். நிர்வாகிகள் தப்ரேஸ் அஹமத், அல்லாஹ் பகஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.