செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

8 வழிச்சாலைக்கு எதிராக  போராடிய விவசாயிகள்  ஜாமீனில் விடுவிப்பு

திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.

Updated On :9 ஜூலை 2018, 12:05 am

திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில்  விடுவிக்கப்பட்டனர்.
 சென்னை - சேலம் இடையே பசுமை விரைவுச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பல ஆயிரம் விவசாய நிலங்களும் அடங்கும். 
அதனால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கம் சார்பாக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் 92 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.  அவர்களில் 63 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 63 பேர் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.