திருவண்ணாமலையில் 8 வழிச் சாலைக்கு எதிராக போராடி கைதாகி வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சென்னை - சேலம் இடையே பசுமை விரைவுச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. அதில் பல ஆயிரம் விவசாய நிலங்களும் அடங்கும்.
அதனால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் சங்கம் சார்பாக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டம் நடத்திய விவசாயிகள் சங்கத்தினர் 92 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 63 பேர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலாளர் ரவீந்திரன் உள்ளிட்ட 63 பேர் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

