மாங்காய்க்கு மானியம் வழங்குமாறு தமிழக அரசை வலியுறுத்தி, குடியாத்தம் பகுதி விவசாயிகள் மாங்காய்களை சாலையில் கொட்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் பகுதியில் மாங்காய் மகசூல் அதிகரித்ததையடுத்து, மாங்காய், மாம்பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்தது.
இதனால் மாங்காய் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மாங்காய்களை ஆந்திர மாநிலத்தில் கொண்டு சென்று விற்பதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சி. ஜெகந்நாதன் தலைமையில் மாங்காய் விவசாயிகள் குடியாத்தம் சித்தூர்கேட்டில் மாங்காய்களை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திர மாநில அரசு வழங்குவது போல் மாங்காய்க்கு டன்னுக்கு ரூ. 2,500 மானியம் வழங்கக் கோருவது, குடியாத்தம் பகுதியில் மாங்காய்ச் சந்தை அமைத்து, அரசே மாங்காய்களை கொள்முதல் செய்ய வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார்! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
பாடல் போட்டு அவமதித்ததாக ஆர்சிபி அணி டிஜே மீது பிசிசிஐயில் புகாரளித்த சிஎஸ்கே.!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்தால் அவரவர் வீட்டிலேயே உணவு கிடைக்காது! - மத்திய அமைச்சர்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

