தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்ற நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் நீட்சியாக, வியாழக்கிழமை (ஏப்.16) முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு அமா்வு நடைபெறவுள்ளது.
மக்களவை-பேரவைகளில் 33 சதவீத மகளிா் இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏதுவாக மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-இல் இருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-ஆவது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் இந்த அமா்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை எதிர்த்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடியேற்றி, மசோதாவின் நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்ததாவது:
”தமிழ்நாடு முதல்வர் அரசியல் செய்கிறார். இங்குள்ள சிலரால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார். மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக யாரும் இல்லை. ஆனால், அதனை நிறைவேற்றவிடாமல் தடுக்க காரணத்தை தேட முயல்கிறார்கள். இது தவறான ஒன்றாகும்.
ஏதேனும் காரணத்தைக் காட்டி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றவிடாமல் தோற்கடித்த நினைத்தால், அது துரதிர்ஷ்டவசமான ஒரு தருணமாக அமையும்.
தமிழ்நாடோ அல்லது வேறு எந்த மாநிலமோ மசோதாக்கள் குறித்துக் கவலைகொள்ளத் தேவையில்லை. அவர்கள் மக்களைத் தவறாக வழிநடத்தவோ, திசைதிருப்பவோ கூடாது. இதுவே எனது வேண்டுகோள். அனைவருக்கும் நியாயமான வாய்ப்பும், பிரதிநிதித்துவமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எதிர்க்கட்சிகளின் ஆதரவளித்தால் மட்டுமே மசோதா நிறைவேறும்.
இதையும் படிக்க : தொகுதி மறுவரையறை! தென் மாநிலங்கள் பாதிக்கப்படுவது எவ்வாறு?
Summary
M.K. Stalin is being misled! — Union Minister Kiren Rijiju
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் பதவிக்காக அதிமுகவை பாஜகவுடன் இணைப்பாரா இபிஎஸ்?

இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா

வெளிநாட்டுப் பயண விவரங்களை ராகுல் தெரிவிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு எச்சரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



