தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கைத்தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத்தரம் மேம்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியிருப்பது தொடர்பாக...

News image

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு - கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2026, 9:58 pm IST

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால நல்லாட்சியில், நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத்தரம் மற்றும் ஒட்டுமொத்த நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

தில்லியில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால நல்லாட்சியில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக சிறுபான்மை சமூகத்தினரின் வாழ்க்கை முறை, வாழ்க்கைத்தரம் மற்றும் ஒட்டுமொத்த நிலைமையும் கணிசமாக மேம்பட்டுள்ளது.

மத்திய அரசின் அனைவருடனும் இணைந்து அனைவருக்குமான வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வைத் திட்டங்களின் பலன்கள் எந்தவித பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைந்துள்ளன.

மேலும், நலத்திடங்கள் தகுதியானவர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்த்ததில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது.

இதன் மூலம் அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையும், திட்டங்களை எளிதாக அணுகும் வசதிகளும் அதிகரித்துள்ளது.

மேலும், வலிமையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்பது தற்போது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களால் உணரப்படும் ஒரு யதார்த்தமாக மாறியுள்ளது என்றும், இலக்கை அடைவதில் சிறுபான்மை சமூகத்தினரின் பங்களிப்பு முக முக்கியமானது என்று அவர் கூறினார்.

Summary

Union Minister of Minority Affairs Kiren Rijiju has said that the life, quality and overalls situation of Minority Communities in the country have improved significantly over the past 12 years.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.