ஜெ.ஜெ. நகர் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி வாலாஜாபேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்து முன்னணியினர் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாலாஜாபேட்டை ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சிக்குள்பட்ட ஜெ.ஜெ. நகர் பகுதி 9-ஆவது வார்டு பகுதியில் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, வேலூர் கிழக்கு மாவட்டம், வாலாஜாபேட்டை ஒன்றிய இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மோகன் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் எஸ்.கஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கமலக்கண்ணனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். பின்னர், கோரிக்கை மனுவைப் பெற்றுக்கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமர் மோடி ஒரு வித்தைக்காரர்! ஆபரேஷன் சிந்தூர் போன்ற வித்தைகளை நிகழ்த்தியவர்! ராகுல் காந்தி

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

