சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றை 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் தவிர்ப்பதற்கு மக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் 2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்த்தல் குறித்த அனைத்துத் துறை ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது:
சட்டப்பேரவை விதி 110-இன் கீழ் வரும் ஜனவரி 1 முதல் மாநிலம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருள்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை சார்பில் ஜூன் 25-ஆம் தேதி அரசாணை எண்- 84 வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருள்கள் பட்டியலிடப்பட்டு, அவற்றுக்கு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உணவுப் பொருள்களைக் கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் ஒட்டும் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக்காலான தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதத் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகிதக் குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் குவளைகள், தெர்மாகோல் குவளைகள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள், பிளாஸ்டிக்காலான உறிஞ்சு குழல்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்), பிளாஸ்டிக் பூசப்பட்ட பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும்.
இந்த வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக வாழை இலை, பாக்குமர இலை, அலுமினியத் தாள், காகிதச் சுருள், தாமரை இலை, கண்ணாடி, உலோகத்தால் ஆன குவளைகள், மூங்கில் மரப் பொருள்கள், காகிதக் குழல்கள், துணி, காகிதம், சணல் பைகள், பீங்கான் பாத்திரங்கள், மண் கரண்டிகள், வெட்டுப் பொருள்கள், மண் குவளைகள் போன்ற பொருள்களைப் பயன்படுத்தலாம். இந்தப் பொருள்கள் முற்றிலும் பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களாகும். ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சுழலுக்கு ஏற்படும் தீமைகள், அவற்றுக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருள்கள் குறித்து உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், வேலூர் சார் ஆட்சியர்
கே.மேகராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி, வேலூர் மண்டல மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாரதிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

21 ஆண்டுகளுக்குப் பிறகு கடம்பநாதசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
அண்ணாமலை அடுத்து என்ன செய்யப் போகிறார்?

பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா? - நிலையாமையைக் கொண்டாடிய கவிஞர் கண்ணதாசன்!

நெல்லையப்பர் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47


