அதிகரித்துவரும் சாலை விபத்துகளைக் குறைக்க பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நந்தகோபால் வலியுறுத்தியுள்ளார்.
ஆற்காடு டெல்லி கேட் அரிமா சங்கம் தொடக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆற்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ராணிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் எஸ்.கௌரி ஜெகந்நாதன் தலைமை வகித்தார். மண்டலத் தலைவர் சி.சிவராஜ், வட்டாரத் தலைவர் எஸ்.பி.தினமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரிமா சங்க மாவட்ட ஆளுநர் பி.நந்தகோபால் கலந்துகொண்டு, புதிய சங்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், தலைவர் டி.அரிபாபு, செயலாளர் சி.ராஜேந்திரன், பொருளாளர் ஜி.சம்மந்தன் உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தும், நலிந்தோறுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் நல உதவிகளை வழங்கியும் பேசியதாவது: உலக அளவில் சேவை நோக்குடன் செயல்பட்டுவரும் சங்கங்களில் 217 நாடுகளில் லட்சக்கணக்கான சேவையாளர்களைக் கொண்ட முதன்மையான சேவை சங்கமாக அரிமா சங்கம் திகழ்கிறது. தற்போது அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் குறைக்க பள்ளிகளில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.
விழாவில் அரிமா சங்க முதல் துணை நிலை ஆளுநர் வி.ராமர், இரண்டாம் துணை நிலை ஆளுநர் கே.அருண்குமார், முன்னாள் மண்டலத் தலைவர் ரவிச்சந்திரன், கேபினெட் செயலாளர் ஆர்.ஜெயக்குமார், பொருளாளர் எஸ்.மதியழகன் மற்றும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை ஆகிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







