திருட்டு வழக்கில் கைதாகி தப்பிய சிறுவன் பிடிபட்டான்
திருட்டு வழக்கில் கைதாகி விசாரணையின்போது தப்பிச் சென்ற சிறுவன், திருப்பத்தூரில் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டான்.


திருட்டு வழக்கில் கைதாகி விசாரணையின்போது தப்பிச் சென்ற சிறுவன், திருப்பத்தூரில் வியாழக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டான்.
திருப்பத்தூர் பகுதியில் நடந்த ஒரு திருட்டுச் சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
பின்னர், அச்சிறுவனை காட்பாடி திருநகரில் உள்ள இளஞ்சிறார் நீதிக்குழு உறுப்பினர் பக்தஜனா முன் ஆஜர்படுத்துவதற்காக அவரது வீட்டிற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அங்கு இளஞ்சிறார் நீதிக்குழும உறுப்பினர், சிறுவனிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிவிட்டுச் சென்ற அச்சிறுவன் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்கவில்லையாம். இதுகுறித்து விருதம்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அச்சிறுவன் திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பதுங்கியிருந்த அச்சிறுவனைப் பிடித்து மீண்டும் கைது செய்தனர். தொடர்ந்து, அச்சிறுவன் வேலூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...